“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் .
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பூலாங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் (27.01.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 26-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏற்பட்ட பெருந்தொற்றான கொரனா நோய்த்தொற்றினை நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அணுகு முறையினாலும், உரிய நடவடிக்கைகளினாலும் அத்தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டார்.
அந்நாளிலிருந்து, இம்மருத்துவத்துறை, சுகாதாரத்துறை நாளுமொரு வண்ணமாக வளர்ச்சியடைந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் என்று தொடங்கப்பட்டு, இன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமாக உயர்த்தப்பட்டு மக்களுக்கு உயர்தர சிகிச்சையினை அளிக்கும் திட்டமாக உயர்ந்துள்ளது.இத்திட்டத்தின் மூலம், ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் நவீன உபகரணங்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை, விருதுநகர் மாவட்டத்தில் 36-இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, 25-முகாம்கள் நிறைவுற்று, தற்பொழுது 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இம்முகாம்களிலேயே, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ஒரு சிறந்த ஆட்சி என்பது மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு செயலாற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று வழங்குவது தான்.மருத்துவத்துறை அதிகாரிகள் தங்களது முழு நேரத்தையும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பணியாற்றுகிறார்கள் என்று கூறினால் அதற்கு முழு காரணம் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் காரணம்.பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தேவைகளை மருத்துவத்துறை அலுவலர்களிடம் எடுத்துக் கூறி, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இன்றைய தினம், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில், 36-சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நிர்ணயிக்கப்பட்டு, தற்பொழுது 25-ஆவது முகாம் நிறைவுற்று 26-ஆவது முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களுக்கே வருகை புரிந்து, மக்களுக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி பயனடையமாறும், இத்தகைய திட்டத்தினை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, 10-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 3-கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும், 3-நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டைகளையும், 2-நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளையும், 3-தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய அட்டைகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply